உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

திருப்பூர்; திருப்பூர் லயன்ஸ் கிளப், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், 775வது மாதாந்திர இலவச கண் சிகிச்சை முகாம், குமரன் ரோடு, லயன்ஸ் கிளப் அலுவலகத்தில் நேற்று நடந்தது.ராமலிங்கம் - சரஸ்வதி அறக்கட்டளை, அருணாசலம் செட்டியார் - லட்சுமி அம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகள் முகாமை துவக்கி வைத்தனர். லயன்ஸ் கிளப் தலைவர் வெள்ளியங்கிரி, செயலாளர்கள் பரமசிவம், கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில், 192 பேர் பங்கேற்றனர்; உயர்சிகிச்சைக்கு, 44 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். லயன்ஸ் கிளப் சார்பில், அடுத்த முகாம், ஏப்., 20ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை