உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

உடுமலை; உடுமலையில், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.உடுமலை அரசு மருத்துவமனையில், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமினை, திருப்பூர் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குனர் வெங்கட்ராமன் துவக்கி வைத்தார்.உடுமலை நல சங்கத்தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, டாக்டர் சுகன்யாதேவி, உளவியல் ஆலோசகர் சம்சத்பானு மனநல ஆலோசனையும், டாக்டர் ரவி, பொது மருத்துவ ஆலோசனையும் வழங்கினர்.முகாமிற்கான ஏற்பாடுகளை, முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை