உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச மருத்துவ முகாம்; பொதுமக்கள் பங்கேற்பு

இலவச மருத்துவ முகாம்; பொதுமக்கள் பங்கேற்பு

திருப்பூர்; திருப்பூர், காந்தி நகர், லயன்ஸ் கிளப் பார்மஸியில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில்குமார், செயலாளர் வெங்கட சுப்பிரமணியம், பொருளாளர் ரமேஷ்குமார் தலைமை வகித்தனர். லயன்ஸ் கிளப் திருப்பூர் சென்ட்ரல், ரேவதி மெடிக்கல் சென்டர், திருப்பூர் ஐ பவுண்டேஷன், ஆரோக்கியம் அக்குபஞ்சர் இணைந்து முகாமை நடத்தினர். இருதயம், நரம்பு, கண் பரிசோதனை, அக்குபஞ்சர், உள்ளிட்ட பரிசோதனைகள் நடந்தன. முகாமில், 150 பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். n திருப்பூர் பி.என்.ரோடு, ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனத்தில் நேற்று இலவச கண்புரை அறுவை சிகிச்சை குறித்த ஆலோசனை முகாம் நடந்தது. அரவிந்த் கண் மருத்துவமனை, ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம் சார்பில் முகாம் நடந்தது. இதில், 183 பேர் பங்கேற்றதில், 33 பேர் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டனர். 83 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ