உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 97 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம்

97 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், மோட்டார் பொருத்திய இலவச தையல் மெஷினுக்காக ஆன்லைனில் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நேர்காணலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் நடத்தினார். 'ஆன்லைனில்' விண்ணப்பித்திருந்த, 183 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நேர்காணலில், மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலர்கள் 127 பேர் பங்கேற்றனர். அவர்கள், தையல் மெஷினில் அமரவைக்கப்பட்டு, நுால் துணி வழங்கப்பட்டு, தையல் தெரியுமா என பரிசோதிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டனர். நேர்காணலில், மொத்தம் 97 பேர், இலவச தையல் மெஷினுக்கு பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். 'முதுகு தண்டுவடம் பாதித்த மற்றும் தசை சிதைவு பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, பேட்டரி வீல் சேர் மற்றும் ஸ்கூட்டரில் பொருத்தி பயன்படுத்தும் வகையிலான 'நியூ மோஷன் வீல் சேர்' வழங்குவதற்கான நேர்காணல், இன்று நடைபெறுகிறது. இதற்காக, மாற்றுத்திறனாளிகள், 50 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காலை, 10:00 மணிக்கு துவங்கும் நேர்காணலில், தவறாமல் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை