மேலும் செய்திகள்
மாநில சி.எம்.ட்ராபி தடகளம்
05-Oct-2025
திருப்பூர்: பள்ளிக்கல்வித் துறை சார்பில் டீ பப்ளிக் பள்ளியில், மாவட்ட தடகளப்போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்ற தி பிரன்ட்லைன் பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு போட்டிகளில் வென்று மாநிலப்போட்டிக்கு தகுதி பெற்றனர். 17 வயதினர் பிரிவில் தனுஷ்கா - நீளம் தாண்டுதலில் 2ம் இடம்; சிவமூர்த்தி - 200 மீ., பிரிவில் 2ம் இடம்; 100 மீ., 2ம் இடம்; மிக மூத்தோர் பிரிவில், நவீன் - உயரம் தாண்டுதலில் முதலிடம்; ஹரிகிருஷ்ணன் - நீளம் தாண்டுதலில் 2ம் இடம்; முகமது சல்மான் - 100 மீ., மற்றும் 200 மீ., முத லிடம்; முகமது அஸ்வத் - 100 மீ., மற்றும் 200 மீ., 3ம் இடம்; மனோஜ்குமார் 1500 மீ., 2ம் இடம், 800 மீ., 3ம் இடம், ஜோசப் பினோ உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்றனர். மஞ்சுநாதன் உயரம் தாண்டுதலில் 3ம் இடம் பெற்றார். முதல் மற்றும் 2ம் இடம் பெற்றவர்கள் மாநிலப்போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமாரை தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன், முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.
05-Oct-2025