உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளிகளில் முழு ஆண்டுத்தேர்வு

அரசு பள்ளிகளில் முழு ஆண்டுத்தேர்வு

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், முழு ஆண்டுத்தேர்வு நடந்து வருகிறது.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் முழு ஆண்டுத்தேர்வுகள் துவங்கியுள்ளன. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில் மொத்தமாக, 186 துவக்க மற்றும் 46 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் கடந்த 7ம் தேதி முதல் தேர்வுகள் நடக்கிறது. வரும் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்வு முடிந்து விடுமுறை விடுவது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.கோடையின் வெப்பமும் அதிகரித்து வருவதால், தேர்வுகளுக்கு மாணவர்கள் உடல்நலத்துடன் வருவதற்கும் ஆசிரியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ