உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அலகுமலையில் கந்தசஷ்டி பக்தர்கள் திரண்டு வழிபாடு

அலகுமலையில் கந்தசஷ்டி பக்தர்கள் திரண்டு வழிபாடு

பொங்கலுார்: பொங்கலுார் அருகேயுள்ள அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று கந்தசஷ்டி விழா கணபதி யாகத்துடன் துவங்கியது. புனித மண்ணால் பூமாதேவி உருவம் படைத்து, புனித நீர் மற்றும் பால் அபிஷேகம், சிறப்பு யாகம் நடந்தது.தொடர்ந்து, வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு மஹா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கங்கணம் அணிந்து விரதத்தை துவக்கினர். நேற்று மாலை கொடுவாய் வெற்றிவேலன் கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம் நடந்தது.விழாவில், இன்று காலை, 16 நாட்டு பசுக்களை கொண்டு ஷோடச கோ பூஜை, சிறப்பு பக்தி சொற்பொழிவு நடக்கிறது. திங்கள் முதல் யாக பூஜை, நடக்கிறது. 7ம் தேதி மூலவர் முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமிக்கு மஹா அபிஷேகம், ஆராதனை, நடக்கிறது. அன்றைய தினம் மாலை சக்திவேல் வாங்குதல், சூரசம்ஹாரம், சாந்தாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து பக்தர்கள் கங்கணம் களைந்து விரதத்தை முடிக்கின்றனர். பின் அன்னதானம் நடக்கிறது. வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம், திருக்கல்யாணம் விருந்து நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.l பொங்கலுாரிலுள்ள கனககிரி வேலாயுத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கணபதி பூஜையுடன் நேற்று துவங்கியது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கங்கணம் அணிந்து சஷ்டி விரதத்தை துவக்கினர். வரும், 7ம் தேதி வரை தினசரி அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ