மேலும் செய்திகள்
விதி மீறல் லாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
15-Sep-2025
திருப்பூர்,; போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அபராதம் செலுத்த கூறி, 5 லட்சத்து, 74 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியது. திருப்பூர், வாவிபாளையத்தை சேர்ந்தவர், 43 வயது மதிக்கதக்க நபர். இவருக்கு சில நாட்களுக்கு முன், அவரது போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், அவருடைய கார் எண் பதிவிட்டு, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இருந்தது. தொடர்ந்து, அந்த லிங்க் மூலம் அபராத தொகையை செலுத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இதனை நம்பிய, ஆர்.டி.ஓ., சலான் என்ற லிங்கிற்குள் சென்றார். எதுவும் இல்லாத காரணமாக வெளியேறினார். இதையடுத்து, அவரது வங்கி கணக்கிலிருந்து, நான்கு தவணைகளாக, 5 லட்சத்து, 74 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது தெரிந்தது. இது குறித்து புகாரின் பேரில், திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2025