உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நொய்யலை சூழும் குப்பை கழிவு... எப்போது வருமோ விடிவு?

நொய்யலை சூழும் குப்பை கழிவு... எப்போது வருமோ விடிவு?

திருப்பூர்; நொய்யல் கரையில் குவிக்கப்படும் குப்பை கழிவுகள், இயற்கை வளத்தை பாழ்படுத்துவதாக மாறி வருகிறது.திருப்பூர் நகரின் மையப்பகுதியில் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. நகர எல்லைக்குள் இந்த ஆற்றில் பல்வேறு ஓடைகள் வந்து இணைகின்றன.சேனாப் பள்ளம், ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம், மந்திரி வாய்க்கால், சபரி ஓடை ஆகியன நொய்யல் ஆற்றில் வந்து சேரும் முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளன. இதுதவிர நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக வந்து சேரும் மழை நீர் வடிகால்கள், கழிவு நீர் வடிகால்கள் ஆங்காங்கே நொய்யலில் சென்று கலக்கிறது.நொய்யலைக் காப்பாற்ற பல அமைப்பினர், முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திலும் பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தில் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள நொய்யல் ஆற்றின் இரு கரைகளும் மேம்பாடு செய்யும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதில், ஆற்றில் குப்பை கழிவுகள் கொண்டு சென்று கொட்டுவதைத் தடுக்கும் விதமாக, கரையை ஒட்டி இரு பகுதியிலும் இரும்பு கம்பி வலை வேலி அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு நொய்யலைக் காக்க பல்வேறு நடவடிக்கை ஒரு புறம் மேற்கொண்டு வந்தாலும், சில விஷமிகள் அது பற்றி கண்டு கொள்ளாமல் தொடர்ந்து ஆற்றை மாசுபடுத்தும் விதமாகவே நடந்து கொள்கின்றனர்.அவ்வகையில், ராயபுரம் பகுதியில், கம்பி வேலி அமைத்து தடுப்பு அமைத்துள்ள இடங்களிலும் நொய்யல் கரையில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர்.நொய்யல் ஆற்றில் தீபம் பாலம் அமைந்துள்ள இடத்தில் இரு புறக்கரைகளிலும் குப்பைகளை பலரும் கொண்டு வந்து குவித்து செல்கின்றனர். இதனால், சுற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, குப்பை கழிவுகள் காற்றில் பறந்து சென்று ரோட்டிலும், நொய்யல் ஆற்றிலும் விழும் நிலை காணப்படுகிறது.இதுபோல் ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்டுவது தவிர்க்க வேண்டும். இதில் ஈடுபடும் நபர்கள் குறித்து கண்காணித்து, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை