உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடியை சுற்றிலும் கழிவுகள்: குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம்

அங்கன்வாடியை சுற்றிலும் கழிவுகள்: குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம்

உடுமலை:உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட போடிபட்டி ஊராட்சி அலுவலகம் அருகே, குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில், 20 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.சுற்றுப்பகுதியிலுள்ள குடியிருப்புகளிலிருந்து பெற்றோர் குழந்தைகளை இந்த மையத்திற்கு அனுப்புகின்றனர். இங்கு குழந்தைகளுக்கான அனைத்து வசதிகள் இருப்பினும், பெற்றோர் முகம் சுழிக்கும் வகையில் மையத்தை சுற்றிலும் கழிவுகளாக குவிந்துள்ளன.மையத்தின் முன், தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுகின்றன. மையம் இருப்பதை காண முடியாத வகையில், பெரிய கற்கள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான ஊராட்சி நிர்வாகத்தின் தள்ளுவண்டிகளும் நிறுத்தப்படுகின்றன.கழிவுகள் காற்றில் பறந்து மைய வளாகத்திலும் குவிந்து விடுகிறது. சில நேரங்களில் மிகுதியான துர்நாற்றம் வீசுவது, கழிவுகளிலிருந்து பூச்சிகள் பறப்பதும் தொடர்கிறது.மேலும், மையத்தின் முன், புதர்போன்ற செடிகளும் வளர்ந்திருப்பதால், விஷப்பூச்சிகள் வந்தாலும் தெரியாத நிலையில் ஆபத்தான பகுதியாகவும் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் சூழலும் அதிகரிக்கிறதுஇதனால், இங்கு குழந்தைகளை அழைத்து வருவதற்கும் தயங்குகின்றனர். அங்கன்வாடி மையப்பகுதியில் கழிவுகள் கொட்டாமல் இருப்பதற்கு, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:அங்கன்வாடி மையத்தின் அருகில், கற்கள் கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கழிவுகள் அப்பகுதியில் கொட்டாமல் இருப்பதற்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. இரவு நேரங்களில் வந்து கொட்டிச்செல்கின்றனர்.இவ்வாறு கழிவுகள் அப்பகுதியில் குவியாமல் இருப்பதற்கு தடுப்புகள் வைப்பதற்கும், முழுமையாக சுத்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை