குப்பையில் தீ தீராத பிரச்னை
திருப்பூர்: மணியகாரம்பாளையத்தில் ரோட்டோரம் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைக்கு நேற்றிரவு யாரோ தீ வைத்து சென்றனர். இதனால், குப்பையில் பிடித்த தீ மளமளவென பரவி எரிய ஆரம்பித்தது. இதனால் அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக மாறியது. அவ்வழியாக வாகனங்கள் கடந்து செல்ல மிகுந்த சிரமப்பட்டனர். குப்பைக்கு தீ வைப்பது தொடர்கதையாக உள்ளது. எனவே, குப்பையை முறையாக அப்புறப்படுத்த வேண்டும், தீ வைக்கும் நபர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.