மற்றவர்களுக்கு குப்பை; சிலருக்கோ வாழ்வாதாரம்
அனுப்பர்பாளையம், ; தற்போது மாநகராட்சி குப்பைகள் பொங்கு பாளையம் ஊராட்சி, காளம் பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பையோடு வரும் பழைய பொருட்களை சேகரிக்க தினமும், 10க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.இவர்கள் குப்பையோடு வரும் பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவற்றை பொறுக்கி தனித்தனியாக தரம் பிரித்து வைக்கின் றனர். அன்றைய தினம், மாலை அதை வாங்க வாடிக்கையாக வரும் வியாபாரியிடம் விற்பனை செய்து, உடனடியாக பணமாக்கி கொள்கின்றனர்.குப்பைகளில் பழைய பொருட்கள் சேகரித்துவரும் போயம்பாளையத்தைச் சேர்ந்த சின்னராஜ் கூறியதாவது :நாங்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக குப்பைகளில் பழைய பொருட்களை சேகரிக்கிறோம்.தினமும், 700 - 800 ரூபாய் வரை கிடைக்கும். இதன் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். குப்பை தான் எங்களுக்கு செல்வம். குப்பையோடு குப்பையாக வாழ்வதால் உடல் நிலை பழகி போய்விட்டது. இதுவரை பாதிப்பு ஏற்பட்டதில்லை. இதில் கிடைக்கும் வருமானத்தில் எனது வாழ்க்கையை ஓட்டுவதுடன் எனது இரண்டு பேரன்களையும் படிக்க வைத்து வருகிறேன்.