உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மயானம் செல்லும் ரோட்டில் கழிவுகளால் அவஸ்தை

மயானம் செல்லும் ரோட்டில் கழிவுகளால் அவஸ்தை

பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொடுவாய் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு போதுமான இட வசதி இல்லை. குப்பைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊராட்சி நிர்வாகம் சார்பில், குப்பை மேலாண்மை திட்டம் சரிவர கையாளப்படுவதில்லை. கொடுவாயின் பெரும்பாலான குப்பைகள் மின் மயான ரோட்டோரம் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அவ்வழியாக சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கியுள்ளதால், அதிக ஈரப்பதம் காரணமாக நோய்க்கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த ரோட்டில் செல்வதற்கே பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வழி நெடுகிலும் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி ரோட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ