உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை மேலாண்மை: தீர்வு காண திணறல்!

குப்பை மேலாண்மை: தீர்வு காண திணறல்!

திருப்பூர், : 'நெடுஞ்சாலையோரம் குப்பைக் கொட்டும் செயல் தவிர்க்கப்பட வேண்டும்' என, நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர் பாஷா, அறிக்கை:அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை, ஆட்டையம்பாளையம் ரோட்டோரம், வீடு, வர்த்தக நிறுவனங்களின் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகின்றன குன்னுார், ஊட்டி, கோவை செல்லும் பிரதான ரோடாக இது உள்ளது.சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், இத்தகைய செயலை தடுத்து நிறுத்த முடியாமல் திணறுகிறது.மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், நெடுஞ்சாலையோரம் குப்பைக் கொட்டும் செயல் தொடர்கிறது. பல நாட்கள், அகற்றப்படாமல் உள்ள குப்பைக்கழிவுகளால், நோய் தொற்று பரவும் வாய்ப்பும் உள்ளது.எனவே, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்கவும், முறைப்படி அவற்றை அகற்றுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ