பள்ளி முன்பு குப்பை மலை மாணவர் - பெற்றோர் கவலை
அனுப்பர்பாளையம் : -அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயில் முன் அப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை தேக்கி வைத்துள்ளனர். அதிக குப்பை தேக்கத்தால், பள்ளி வளாகம் மற்றும் அந்த ரோடு முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், பள்ளி மைதானத்தில் நடைபயிற்சி செல்வோர் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். பள்ளி மாணவர்கள் நலன் கருதி குப்பையை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.