உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை லாரி சிறைபிடிப்பு காளம்பாளையத்தில் பரபரப்பு

குப்பை லாரி சிறைபிடிப்பு காளம்பாளையத்தில் பரபரப்பு

அனுப்பர்பாளையம் : பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி குப்பைகள் கொட்டப்படுகின்றன.இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும், மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கும் பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மாநகராட்சி சார்பில், இங்கு குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில், அப்பகுதியினர் குப்பை கொட்ட வரும் லாரியை சிறைபிடிப்பது; தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று அறிவித்து இருந்தனர்.நேற்று காலை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ் குமார், அப்பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர், குப்பை கொட்ட சென்ற லாரியை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.இருவரையும் பெருமா நல்லுார் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதையறிந்த விவசாய சங்கத்தினர் போலீஸ் ஸ்டேஷன் முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ''குப்பை கொட்ட வரும் லாரியை தடுக்கக்கூடாது'' என்று போலீசார் அறிவுறுத்தி இருவரையும் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை