உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடை உற்பத்தி பயிற்சி வரும் 19ல் துவங்குகிறது

ஆடை உற்பத்தி பயிற்சி வரும் 19ல் துவங்குகிறது

திருப்பூர் : திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், நிப்ட்-டீ கல்லுாரி இணைந்து பகுதி நேர ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அப்பேரல் மெர்ச்சன்டைசிங், குவாலிட்டி கன்ட்ரோல், பேட்டர்ன் மேக்கிங், ஓவர்லாக், பிளாட் லாக், பவர் சிங்கர் அடங்கிய டெய்லரிங் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து, பகுதி நேர பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மணியன் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. பகுதி நேர பயிற்சி வகுப்பில், ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து நுணுக்கங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதனால், ஆடை உற்பத்தியில் தவறுகள் தவிர்க்கப்படும். சிறந்த சம்பளத்தில் நல்ல வேலைவாய்ப்பு பெறுவதன்மூலம், தொழிலாளர் வாழ்வும் முன்னேற்றம் பெறும்.ஐந்தாவது பயிற்சி வகுப்பு, வரும், 19ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், புதிய தொழில்முனைவோர், வேலையில்லாத பட்டதாரிகள், இப்பயிற்சி வகுப்பில் இணையலாம். பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், 78451 84962, 95979 14182 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ