உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எரிவாயு குழாய் பதிப்பு விவகாரம்; விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

எரிவாயு குழாய் பதிப்பு விவகாரம்; விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பொங்கலுார்; கொச்சியில் இருந்து கரூர் வரை குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.கோவை - இருகூரிலிருந்து, கர்நாடக மாநிலம், தேவனகொந்தி வரை மற்றொரு எரிவாயு குழாய் கொண்டு செல்லும் திட்டம் உள்ளது. ஏற்கனவே, பதிக்கப்பட்ட குழாய்களில் நில மதிப்பு குறைந்துள்ளது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.முந்தைய வழித்தடத்தை பயன்படுத்தாமல் இருகூரிலிருந்து முத்துார் வரை, 70 கி.மீ., நீளத்துக்கு நெடுஞ்சாலை ஓரமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் பொங்கலுார் அருகே அவிநாசி பாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்குஎம்.எல்.ஏ.,க்கள் ஆனந்தன், கந்தசாமி உள்ளிட்டோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.நிகழ்ச்சியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி, மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், மாநில தலைவர் சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ