கைகொடுத்த மழை; பசுந்தீவன பரப்பு அதிகரிப்பு
பொங்கலுார் : மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வறட்சி நிலவியதால் மேய்ச்சல் நிலங்கள் கருகிக் கிடந்தன. இதனால் கால்நடை விவசாயிகள் தீவன பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்தனர்.தீவனப்பற்றாக்குறையை போக்க கழிவுப்பஞ்சுகளை வாங்கி நிலைமையை சமாளித்தனர்.மே மாதத்தில் கோடை மழை பல இடங்களில் பெய்துள்ளது. இதைத்தொடர்ந்து மேய்ச்சல் நிலங்களில் கோரை, அருகு, கொழுக்கட்டை உள்ளிட்ட புல் வகை தாவரங்கள் நன்றாக வளரத் துவங்கியுள்ளன. கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை நீங்கியுள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு தீவனச் செலவு குறைந்துள்ளது. பசுந்தீவன வளர்ச்சியால் பால் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.