உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காரீப் பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுங்க! விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அட்வைஸ்

காரீப் பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுங்க! விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அட்வைஸ்

உடுமலை: விவசாயிகள், காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களை, உரிய காலத்துக்குள் காப்பீடு செய்து கொள்ள, வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். எதிர்பாராத விதமாக விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி, பாதுகாக்கும் வகையிலும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதற்காகவும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம், கடந்த 2016ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த 2020ல் புதிய நடைமுறைகளை மாற்றம் செய்து, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த திட்டத்தில் கடன் பெறும் விவசாயிகளை, கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில் தற்போது, விருப்பத்தின் பேரில் மட்டுமே பதிவு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மாவட்டம் வாரியான, பயிர் வாரியான சராசரி மகசூல் அட ி ப்படையில் காப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 2025 - 26 ஆண்டுக்கான, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தை, தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. காரீப் பருவத்தில், மக்காச்சோளம் - 1, நிலக்கடலை, சோளம் போன்ற பயிர்களுக்கான காப்பீடு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள், தாங்கள் பயிர்க்கடன் பெறும் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட விவசாயிகள், இயற்கை சீற்றங்கள் ஏற்படும்முன், தங்களது காரீப் பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும். நிலக்கடலை ஏக்கருக்கு, 664 ரூபாய்; சோளத்துக்கு, 104 ரூபாய்; மக்காச்சோளத்துக்கு, 762 ரூபாய் பிரீமியம் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலக்கடலை, சோளத்துக்கு, வரும் ஆக., 30ம் தேதிக்குள்ளாகவும், மக்காச்சோளத்துக்கு, செப்., 16ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள், வி.ஏ.ஓ.,விடமிருந்து நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் பெற்று, அதனுடன் வங்கி பாஸ் புத்தக முதல்பக்க நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன், பொது சேவைமையத்திலோ அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துகொள்ளவேண்டும். அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லது வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர்களை அணுகி கூடுதல் விபரங்கள் பெறலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை