உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாரிசு அடிப்படையில் மகளுக்கு வேலை கொடுங்க!

வாரிசு அடிப்படையில் மகளுக்கு வேலை கொடுங்க!

திருப்பூர்; வாரிசு அடிப்படையில், தனது மகளுக்கு மாநகராட்சியில் வேலை வழங்க கோரி ஒரு தாய், 20 ஆண்டுகளாக போராடிவருகிறார்.திருப்பூர், சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த லட்சுமி, 63. இவர் தனது இரண்டு மகள்களுடன், நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்தார்.இது குறித்து, லட்சுமி கூறியதாவது:திருப்பூர் மாநகராட்சியில் டிரைவராக பணிபுரிந்த எனது கணவர் ரவி, கடந்த 2014 ல் இறந்துவிட்டார். சாந்தி என்பவர், வாரிசு சான்று பெற்றுக்கொண்டு, தனது மகனான வேல்முருகனுக்கு முறைகேடாக, மாநகராட்சியில் வாரிசு அடிப்படையில் வேலை வாங்கிகொண்டார். கடந்த 2017 ல் வேல்முருகன் இறந்துவிட்டார்.எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நாங்கள் வறுமையில் தவிக்கிறோம். எங்களிடம் வாரிசு சான்று உள்ளது. உண்மையான வாரிசுகள் நாங்கள்தான். எனவே, வாரிசு அடிப்படையில், மகளுக்கு மாநகராட்சியில் வேலை வழங்க கோரி, 20 ஆண்டுகளாக போராடிவருகிறோம். அதிகாரிகள் யாரும் எங்கள் குரலுக்கு செவிசாய்க்கவில்லை. நேர்மையானவகையில் விசாரணை நடத்தி, உண்மையான வாரிசு தாரரான எனது மகளுக்கு மாநகராட்சியில் வேலை வழங்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி