உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தடுப்பணைகள் நிரம்பியதால் மகிழ்ச்சி! நீர் மட்டம் உயர வாய்ப்பு

தடுப்பணைகள் நிரம்பியதால் மகிழ்ச்சி! நீர் மட்டம் உயர வாய்ப்பு

உடுமலை ; தொடர் மழை மற்றும் திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால், பெரும்பாலான தடுப்பணைகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கடந்தாண்டு போதியளவு பருவமழை பெய்யாமல், நிலத்தடி நீர் மட்டம் சரிந்து, விவசாயம் பாதித்தது.குறிப்பாக, நீண்ட கால பயிராக பராமரிக்கப்படும் தென்னை மரங்களை காப்பாற்ற, தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டனர். இந்நிலையில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து ஆக., மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது.முதல் இரண்டு சுற்று தண்ணீர் திறப்பின் போதும் மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. இதனால், விவசாயிகள் கவலையில் இருந்தனர்.இந்நிலையில், கடந்த மாதம் மூன்றாம் சுற்றுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதும், பரவலாக மழை பெய்தது.தொடர் மழை மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால், மழை நீர் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறு மற்றும் போர்வெல்களுக்கு நீர்வரத்து கிடைத்தது.தற்போது உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், மழை நீர் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட பெரும்பாலான தடுப்பணைகள் மற்றும் கிராம குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'ஓராண்டுக்குப்பிறகு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மழை தொடர்வதால், பி.ஏ.பி., ஆயக்கட்டு பகுதிகளிலுள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். குளங்கள் நிரம்பினால், உள்ளூர் குடிநீர் ஆதாரங்களான போர்வெல்களுக்கும் நீர்வரத்து கிடைக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை