உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கலைக்கல்லுாரி மாணவர் பேரவைத்தேர்தல்

அரசு கலைக்கல்லுாரி மாணவர் பேரவைத்தேர்தல்

உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், நடப்பு, 2024 - 25 கல்வியாண்டுக்கான மாணவர் பேரவைத்தேர்தல் நடந்தது.இதில், இளநிலை மூன்றாமாண்டு மாணவர்களின் சார்பில், துறைச்செயலாளர் பதவிக்கான போட்டியும், இளநிலை இரண்டாமாண்டு மாணவர்களின் சார்பில், துறை இணைச்செயலாளர் பதவிக்கான போட்டியும் நடந்தது.மாணவர்கள் அந்தந்த துறைக்கான ஓட்டுகளை பதிவு செய்து, துறைச்செயலாளர் மற்றும் இணைச்செயலாளர்களை தேர்வு செய்தனர். தொடர்ந்து துறைச்செயலாளர்கள், கல்லுாரி மாணவர் பேரவைத்தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுத்தனர்.துறை இணை செயலாளர்கள், மாணவர் பேரவைச்செயலாளர் மற்றும் மகளிர் செயலாளரை தேர்ந்தெடுத்தனர். இதன்படி, கல்லுாரி மாணவர் பேரவைத்தலைவராக மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவர் ராஜமாணிக்கம் தேர்வு செய்யப்பட்டார்.துணைச்செயலாளராக மூன்றாமாண்டு பி.காம்., மாணவர் கபிலேஷ், செயலாளராக இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை மாணவர் மோலிக்மேனன், மகளிர் செயலாளராக இரண்டாமாண்டு பி.பி.ஏ., மாணவி கார்த்திகா தேர்வு செய்யப்பட்டனர்.கல்லுாரி துறைத்தலைவர்கள், தேர்தல் நடத்தும் வழிகாட்டுதல்குழு உறுப்பினர்களாக செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் கல்யாணி, துறை பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை