மேலும் செய்திகள்
அரசு பஸ்சில் கழன்று விழுந்த படிக்கட்டு
05-Sep-2025
குட்கா கடத்திய அரசு பஸ் கண்டக்டர் கைது
10-Sep-2025
திருப்பூர்; திருப்பூர் வந்த அரசு பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி, பஸ்சின் முன்புற கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கப்பள்ளியிலிருந்து திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு, அரசு டவுன் பஸ் வழித்தடம் எண்: 8 நேற்று காலை வந்து கொண்டிருந்தது. பஸ்சில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள், 50 பேர் இருந்தனர். கருமாரம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் வந்து நின்ற போது, போதையில் இருந்த ஒரு நபர் பஸ்சில் ஏறினார். ஏறியவுடனே, பஸ்சிலிருந்த பள்ளி மாணவர் ஒருவர் மற்றும் ஒரு பயணியுடன் அவர் தகராறு செய்துள்ளார். அங்கிருந்து புறப்பட்ட பஸ்சை நிறுத்திய கண்டக்டர், போதை நபரை கீழே இறக்கி விட்டார். கண்டக்டருடன் வாக்குவாதம் செய்த அந்நபர் ரோட்டில் கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் முன்புறக்கண்ணாடியை உடைத்து தகராறு செய்தார். இதில் பெண் பயணி ஒருவருக்கு காயமேற்பட்டது. அருகிலிருந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பஸ்சிலிருந்த பயணிகள் மற்றும் ரோட்டிலிருந்த பொதுமக்கள் தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பெயர் ஜெயக்குமார், 34 என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
05-Sep-2025
10-Sep-2025