உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கல்லுாரி கலைத்திருவிழா; மாணவ, மாணவியர் உற்சாகம்

அரசு கல்லுாரி கலைத்திருவிழா; மாணவ, மாணவியர் உற்சாகம்

பல்லடம்;பல்லடம் அரசு கல்லுாரியில் துவங்கிய கல்லுாரி கலைத் திருவிழாவில், மாணவ மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். தமிழக அரசு, உயர்கல்வித்துறை உத்தரவின் பேரில், அரசு கல்லுாரிகளில், கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. பல்லடம் அரசு கலைக் கல்லுாரியில், நேற்று கல்லுாரி கலைத்திருவிழா துவங்கியது. கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். கவிதை, கட்டுரை, ஓவியம், பரதம், இலக்கியம், அறிவியல் உட்பட, 32 வகையான தலைப்புகளில், மாணவர்களிடையே போட்டி நடத்தப்பட்டது. கல்லுாரி அளவிலான போட்டியில், 500க்கும் அதிகமான மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரி பேராசிரியர் பிருந்தா, திருப்பூர் ஏ.வி.பி., கல்லுாரி பேராசிரியர் மஞ்சுளா மற்றும் பல்லடம் வின்னர்ஸ் அகாடமி பயிற்றுனர் மணிகண்டன் நடுவர்களாக செயல்பட்டு, வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். இன்றும், நாளையும் என, தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கவுள்ள கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர், மாவட்ட அளவில் அல்லது பல்கலை அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ