மேலும் செய்திகள்
செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
05-Nov-2024
உடுமலை; மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில்,பெண் டாக்டரை தாக்க முயற்சித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மடத்துக்குளம் அரசு மருத்துவமனை முன், பெண் மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் முருகசாமி, மகளிர் துணைக்குழு அபிராமி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவரை தாக்கியவரை கைது செய்த போலீசார், குற்றவாளிக்கு சாதகமாக நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
05-Nov-2024