அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
உடுமலை, ; உடுமலை அரசு அலுவலகங்கள், முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மருத்துவத்துறையில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து, ஒப்பந்தம் மற்றம் தொகுப்பூதிய முறையில் 4 ஆயிரம் பணியிடங்களையும், நில அளவைத்துறையில், 707 பணியிடங்களையும் நிரப்பும் அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, கிராம உதவியாளர் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதிய நடைமுறை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், ஒன்றிய அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். பொருளாளர் தங்கபாண்டி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் அம்சராஜ், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.