உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாக்கெட்டில் வைத்திருந்த ஐ.டி., கார்டு; பட்டென அணிந்த அரசு அலுவலர்கள்

பாக்கெட்டில் வைத்திருந்த ஐ.டி., கார்டு; பட்டென அணிந்த அரசு அலுவலர்கள்

திருப்பூர்; 'அடையாள அட்டைகளை அனைவரும் அணியுங்கள்' என்று குறைகேட்பு கூட்டத்தின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுறுத்தியதும், தங்கள் பாக்கெட் மற்றும் பேக்குகளில் வைத்திருந்த அடையாள அட்டைகளை எடுத்து, அரசு அலுவலர்கள் அணிந்தனர். கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்; மாதத்தின் கடைசி வாரத்தில், விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விரு கூட்டங்களிலும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், தங் கள் அடையாள அட்டைகளை அணிவதில்லை . இதனால் குறிப்பிட்ட அதிகாரி, எந்த துறை சார்ந்தவர் என்கிற விவரங்களை பொதுமக்களால் எளிதில் கண்டறிய முடிவதில்லை. அனைத்து அரசு துறை அலுவலர்களும், தங்கள் அடையாள அட்டைகளை அணியவேண்டும் என, சமூக ஆர்வலர் கிருஷ்ணசாமி, தொடர்ந்து மனு அளித்துவருகிறார். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் துவங்கியபோது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஷீலா பூசலட்சுமி, 'அனைவரும் அடையாள அட்டை அணிந்துகொள்ளுங்கள். ஐ.டி., கார்டு அணியாதது ஒரு புகாராக வருகிறது' என்றார். இதையடுத்து, அனைத்து அரசு அலுவலர்களும், தங்கள் பேக், பாக்கெட்டுகளில் வைத்திருந்த அடையாள அட்டையை எடுத்து, கழுத்தில் போட்டுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை