உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு திட்டப் பணிகள்; கலெக்டர் திடீர் ஆய்வு

அரசு திட்டப் பணிகள்; கலெக்டர் திடீர் ஆய்வு

பல்லடம்; பல்லடம் ஒன்றியம், செமிபாளையம் ஊராட்சி சாமிகவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மருந்துகள் இருப்பு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் விவரங்களை கேட்டறிந்தார்.தொடர்ந்து, லட்சுமி மில்ஸ் பகுதியில் நடந்து வரும் சாலை பணி, நுாறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் நர்சரி, மல்லேகவுண்டம்பாளையத்தில் நடந்து வரும் சாலைப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கே. அய்யம்பாளையம் ஊராட்சியில், 20 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது. அருள்புரம் வட்டார வணிகவளம் மையத்தில், மகளிர் சுய உதவி குழுவினருக்கான தொழில் முனைவோர் வங்கி கடன் ஆணைகளை வழங்கி அவர்களுடன் உரையாடினார். இதையடுத்து, பொங்கலுார் ஊராட்சி, ராம்நகர் சேவை மைய மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடினார். தெற்கு அவிநாசி பாளையம் ஊராட்சியில், 3 முதியோர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது. திட்ட இயக்குனர் சாம் சாந்தகுமார், பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பி.டி.ஓ.,க்கள் கனகராஜ், பானுப்பிரியா, விஜயகுமார், ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி