மேலும் செய்திகள்
சுற்றுசுவர் வசதி இல்லாத உள்ளாவூர் அரசு பள்ளி
12-Dec-2024
உடுமலை; உடுமலை சிவசக்தி காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சமூக விரோதிகள் பள்ளி பாதுகாப்பு வேலி கம்பிகளை சேதப்படுத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர்.உடுமலை வட்டார அளவில், மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் சிவசக்தி காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும் ஒன்று. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.போதிய வகுப்பறை வசதி, சத்துணவுக்கூடம், பள்ளி வளாகத்தில் இடவசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தும் உள்ளது. ஆனால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாக உள்ளது.சிவசக்தி காலனி குடியிருப்புகளுக்கு நடுவில் இப்பள்ளி உள்ளது. அருகில் வீடுகள் இருந்தும் பள்ளியின் சுற்றுச்சுவரை சேதப்படுத்துவது, பள்ளி வளாகத்தில் பாட்டில்களை உடைத்து வீசுவது, வகுப்பறை முன் அசுத்தப்படுத்தி செல்லும் சமூக விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.விடுமுறை நாட்களில், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளிக்குள் நுழைந்து, இத்தகைய செயல்களை செய்கின்றனர்.இதுகுறித்து, சில நாட்களுக்கு முன்பு 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, பள்ளி சுற்றுசுவரின் உயரத்தை அதிகரிப்பதற்கும், கம்பி வேலி அமைப்பதற்கும் கல்வித்துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.கம்பி வேலி அமைப்பதற்கு கம்பிகளும் சுற்றுச்சுவரில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் சமூக விரோதிகள் சிலர், சுற்றுச்சுவரில் இருந்த கம்பிகளை வளைத்து சேதப்படுத்தியுள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறையில் இதுகுறித்து புகார் செய்துள்ளனர்.பள்ளி மேலாண்மைகுழுவினர் கூறியதாவது:இப்பிரச்னைக்கு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி நிர்வாகம், போலீஸ் துறையினர், இவ்வாறு பள்ளியை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமூக விரோதிகள் இவ்வாறு செய்வதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சமாக உள்ளது. பொதுமக்கள் நடமாடும் இப்பகுதியில், எந்த ஒரு பயமும் இல்லாமல் அவர்கள் பள்ளி வளாகத்தை தொடர்ந்து சேதப்படுத்துகின்றனர்.இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
12-Dec-2024