சரக கைப்பந்து போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
அரூர், அரூர் சரக அளவிலான கைப்பந்து போட்டிகள் எச்.தொட்டம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மொத்தம், 12 அணிகள் கலந்து கொண்டன. இதில், ஜூனியர் பிரிவில் கே.வேட்ரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். அதேபோல், சீனியர் பிரிவில் இப்பள்ளி மாணவியர் இரண்டாமிடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் அன்புமணி ஆகியோரை, தலைமையாசிரியர் நாகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.