குமுதா பள்ளி மாணவிக்கு கவர்னர் பாராட்டு சான்றிதழ்
திருப்பூர்; செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அகத்திய மாமுனிவர் குறித்த கட்டுரை போட்டி, சென்னையில் நடந்தது.இதில், குமுதா பள்ளி பிளஸ் 2 மாணவி மேகவர்ஷினி மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார். தமிழக கவர்னர் ரவி, மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத்தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் டாக்டர் காமகோடி உள்ளிட்டோர் மாணவியை வாழ்த்தினர்.மாணவியை பள்ளித் தாளாளர் ஜனகரத்தினம், துணைத் தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.