மேலும் செய்திகள்
அக்., 2ல் கிராமசபா ஒத்திவைப்பு
30-Sep-2025
திருப்பூர்; விஜயதசமி விழாவை முன்னிட்டு, கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் கிராமசபா ஒத்தி வைக்கப்பட்டு வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை: திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 ஊராட்சிகளிலும், வரும் 11ம் தேதி, காலை, 11:00 மணியளவில் கிராமசபா கூட்டம், அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும். கிராம மக்களின் மூன்று அத்தியாவசிய தேவைகளை தேர்வு செய்து, கிராமசபாவில் ஒப்புதல் பெறவேண்டும். சாதி பெயர்கள் கொண்ட கிராம சாலைகள், தெருக்கள் பெயரை மாற்றுதல்; ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம்; ஊராட்சியின் கிராம தணிக்கை அறிக்கை; மழை நீர் சேகரிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.நுாறுநாள் வேலை திட்டம், தாய்மை பாரத இயக்க திட்டம், தீனதயாள் உபத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், 'சபாசார்' செயலியின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கவேண்டும். கிராமசபா கூட்டத்தை திறம்பட நடத்துவதற்காக, ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
30-Sep-2025