உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரங்கள் வெட்டி அழிப்பு பசுமை ஆர்வலர் கொதிப்பு

மரங்கள் வெட்டி அழிப்பு பசுமை ஆர்வலர் கொதிப்பு

பல்லடம், : பல்லடம் அடுத்த அனுப்பட்டி கிராமத்தில், ரோட்டோரத்தில் இருந்த, 15க்கும் மேற்பட்ட பசுமையான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டன. பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமையிலான பசுமை ஆர்வலர்கள், மரக்கன்றுகளுடன் வந்து தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர்.அண்ணாதுரை கூறியதாவது: எந்தவித பாதிப்பும் இல்லாத பசுமையான மரங்களை சம்பந்தமே இல்லாமல் வெட்டி அழிக்கின்றனர். கடந்த காலங்களில் இது தொடர்பாக பல்வேறு புகார் மனுக்கள் அளித்துள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படியே ஒவ்வொரு மரங்களாக வெட்டி வீழ்த்தினால், எதிர்காலத்தில் பல்லடம் பாலைவனமாகத்தான் இருக்கும். அனுப்பட்டி கிராமத்தில், 15க்கும் அதிகமான வேப்ப மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. இவற்றை யார் வெட்டினார்கள்? வெட்டப்பட்ட மரங்கள் எங்கு சென்றன என்பது குறித்த தகவல்கள் இல்லை. மரங்களை வெட்டியவர்களை கண்டறிந்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ