மேலும் செய்திகள்
நாமக்கல்லில் அண்ணாதுரை பிறந்த நாள் பேச்சு போட்டி
31-Oct-2025
திருப்பூர்: திருப்பூர், 15 வேலம்பாளையம் டிஸ்ஸோ பள்ளி ரோடு, கே.வி.கார்டனில் உள்ள பசுமை மீட்பு அறக்கட்டளையின் நாற்றுப்பண்ணையில் மாணவ, மாணவியர் களப்பணி மேற்கொண்டனர். திருமுருகன்பூண்டி ரோட்டரி மற்றும் அம்மா பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, ராக்கியாபாளையம் உயர்நிலைப்பள்ளி, அவிநாசி சாந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி இன்ட்ராக்ட் கிளப்களின் சார்பில், அப்பள்ளிகளை சேர்ந்த 43 மாணவ, மாணவியர் களப்பணி மேற்கொண்டனர். பசுமை மீட்பு அறக்கட்டளை தலைவர் முருகன் தலைமை வகித்தார். பள்ளிகளின் இன்ட்ராக்ட் கிளப் தலைவர்கள் பஹீமா பர்வீன், காவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை துணைத்தலைவர் வசந்தாமணி வரவேற்றார். நிர்வாக மேலாளர் சக்திவேல் மாணவ, மாணவியருக்கு செடி, மரம் வளர்ப்பதன் நோக்கம், பயன், வளர்ப்பு முறை குறித்து செயல் விளக்கம் கொடுத்தார். பின்னர் மாணவியர் தாங்கள் கொண்டு வந்த விதைகள் மூலம் விதைப்பந்து உருண்டை செய்து, அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று விளக்கினர். அந்த நாற்றுப்பண்ணைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதைகளை வழங்கினர். மரம் வளர்ப்பது குறித்து உறுதிமொழி எடுத்தனர். தேவையில்லாத புல், களைகளை அகற்றினர். இன்ட்ராக்ட் கிளப் தலைவர் சக்கரபாணி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அம்மாபாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் லலிதா, மைதிலி வாணி, அம்மாபாளையம் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் சபியுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச மூலிகை செடிகள் வழங்கப்பட்டன.
31-Oct-2025