உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  போலி ரூபாய் நோட்டு அச்சிட்ட மளிகை கடைக்காரர் கைது

 போலி ரூபாய் நோட்டு அச்சிட்ட மளிகை கடைக்காரர் கைது

திருப்பூர்: திருப்பூர் - மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, கடந்த 2 நாள் முன், கள்ள நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் தணிக்கை செய்தபோது, கவுதம் என்பவரால், போலி ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், வங்கி மேலாளர் மணிமாறன், 46, திருப்பூர் மத்திய போலீசில் புகார் அளித்தார். போலீசார், ஏ.டி.எம். ல் பணம் டெபாசிட் செய்த கவுதமிடம் விசாரணை நடத்தினர். முருகம்பாளையம் கண்ணன் காட்டேஜ் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். மளிகை கடை நடத்தும் இவர், வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழிலும் செய்துவருகிறார். இவரிடமிருந்து, கவுதம், வட்டிக்கு 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில், ஆறாயிரம் ரூபாய்க்கு, 12 எண்ணிக்கையில் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட, 500 ரூபாய் போலி நோட்டுக்களை மறைத்துவைத்து கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இதனை தொடர்ந்து, ராஜேந்திரனை கைது செய்த போலீசார், மளிகை கடையில் ஆய்வு நடத்தி ரூபாய் நோட்டு பிரின்ட் செய்வதற்காக பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் மெஷின் மற்றும் 12 எண்ணிக்கையில் 500 ரூபாய் போலி நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். ராஜேந்திரன் வேறு யார் யார் யாருக்கெல்லாம் போலி ரூபாய் நோட்டுக்கள் அச்சிட்டு வழங்கினார் என்பது குறித்து, போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை