மேலும் செய்திகள்
புகையிலை விற்றவர் கைது
06-Mar-2025
திருப்பூர்; திருப்பூர் மாநகர பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், 2021 ஆக., 28ம் தேதி, தன் வீட்டருகே உள்ள மளிகை கடைக்கு பொருள் வாங்கச் சென்றார்.கடை உரிமையாளர் கலீல் ரகுமான், 55 அப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து அத்துமீறி நடந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு திருப்பூர் விரைவு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இதில் கலீல் ரகுமானுக்கு, 3 ஆண்டு சிறை மற்றும், 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அரசு தரப்பில் உதவி அரசு வக்கீல் பானுமதி ஆஜரானார்.
06-Mar-2025