உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மிளகாய் சாகுபடிக்கு நிலப்போர்வை

மிளகாய் சாகுபடிக்கு நிலப்போர்வை

உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில், கிணற்று பாசனத்துக்கு பரவலாக காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. இதில், சிறு, குறு விவசாயிகள், நீர் இருப்பை பொறுத்து, சாகுபடியை தேர்வு செய்கின்றனர். அவ்வகையில், பச்சை மிளகாய், வெண்டை உள்ளிட்ட சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.இச்சாகுபடியிலும், தண்ணீர் சிக்கனத்துக்காக, நிலப்போர்வை அமைக்கும் முறையை பின்பற்றி வருகின்றனர். தற்போது, மைவாடி சுற்றுப்பகுதியில், இம்முறையில், பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நிலப்போர்வை அமைத்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில், முன்பு மானியமும் வழங்கப்பட்டு வந்தது. அனைத்து சீசன்களிலும், மானியத்திட்டத்தை கிராமம்வாரியாக விரிவுபடுத்தினால், பயனுள்ளதாக இருக்கும். நிலத்தடி நீர் அதிகப்படியாக எடுப்பது தவிர்க்கப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை