உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குரூப் 2ஏ மாதிரி தேர்வு; 65 பேர் எழுதினர்

குரூப் 2ஏ மாதிரி தேர்வு; 65 பேர் எழுதினர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நேற்று குரூப் 2ஏ, மாதிரி தேர்வு நடைபெற்றது; 65 பேர் பங் கேற்று தேர்வு எழுதினர்.துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான குரூப் '2ஏ' தேர்வு, வரும் 2025 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், கடந்த செப். 18ம் தேதி முதல், குரூப் '2ஏ' தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.ஒருமாத பயிற்சி அளிக்கப்பட்டுள்ள நிலையில், குரூப் '2 ஏ' மாதிரி தேர்வு, கலெக்டர் அலுவலகத்திலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் துவக்கிவைத்தார். 65 பேர் பங்கேற்று மாதிரி தேர்வு எழுதினர்.காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை தேர்வு நடைபெற்றது. பொது அறிவு சார்ந்து 100 கேள்விகள்; கணிதத்தில் 40; தமிழில் 60 என மொத்தம் 200கேள்விகள் கேட்கப்பட்டன. மாணவர்கள் பிரதான தேர்வு போலவே, மிக கவனமாக யோசித்து, மாதிரி தேர்வில் பதிலளித்தனர்.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி பெறுவோருக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை இத்தகைய மாதிரி தேர்வு நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ