உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்களிடம் பெருகி வரும் உடல் தான விழிப்புணர்வு

மக்களிடம் பெருகி வரும் உடல் தான விழிப்புணர்வு

திருப்பூர்: 'உடல் தானம், கண் தானம்' குறித்த விழிப்புணர்வு பெருகி வருவதாக மருத்துவர்கள் கூறினர்.திருப்பூர், சாஸ்திரி நகரில் வசிப்பவர் கருப்பசாமி, 66; பனியன் நிறுவன உரிமையாளர். அவரது மனைவி தேவி. இருவரும் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தங்கள் உடலை தானமாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளனர்.கருப்பசாமி கூறுகையில், ''நம் பிள்ளைகளுக்கு நல் எடுத்துக்காட்டாகவும், வருங்கால சந்ததியினருக்கு உடல் தானம், உறுப்பு தானம், ரத்த தானம் போன்றவற்றை செய்வதற்கு ஊக்குவிப்பாகவும் இது அமையும்'' என்றார்.தெற்கு ரோட்டரி தலைவர் மோகனசுந்தரம் கூறுகையில், ''கருப்பசாமி தெற்கு ரோட்டரியின் உறுப்பினர். உடல் தானம் செய்த கருப்பசாமி தம்பதியின் செயல், ரோட்டரி அமைப்புக்கே பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது' என்றார்.''உடல் உறுப்புகள் தானம், கண் தானம் குறித்த விழிப்புணர்வு பெருகி வருகிறது. இறந்த பின்னும் நாம் சமுதாயத்திற்குப் பங்களிப்பவர்களாக இவை அமையும். பொதுமக்கள் பலரும் தங்கள் உடல் மற்றும் கண்களைத் தானமாகத் தர முன்வருகின்றனர்'' என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ