உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வர்த்தகர் பிரச்னைக்கு உடனடி  தீர்வு ஜி.எஸ்.டி., உதவி கமிஷனர் உறுதி

வர்த்தகர் பிரச்னைக்கு உடனடி  தீர்வு ஜி.எஸ்.டி., உதவி கமிஷனர் உறுதி

திருப்பூர்,; 'தொழில் துறையினரின் வரி சார்ந்த பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்,'' என, திருப்பூர் மண்டலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய ஜி.எஸ்.டி., உதவி கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.மத்திய ஜி.எஸ்.டி., திருப்பூர் மண்டல உதவி கமிஷனராக பணிபுரிந்த சினு வி தாமஸ், பணியிட மாறுதலாகி, குன்னுாருக்கு சென்றார். அவருக்கு பதிலாக, கோவையில் தணிக்கை பிரிவில் பணிபுரிந்த கார்த்திகேயன், திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார். குமார் நகரிலுள்ள ஜி.எஸ்.டி., அலுவலகத்தில், திருப்பூர் மண்டல புதிய உதவி கமிஷனர் நேற்று பொறுப்பேற்றார். திருப்பூர் வரி பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர், உதவி கமிஷனரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.உதவி கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில், ''திருப்பூர், நாட்டின் மிக முக்கியமான பின்னலாடை ஏற்றுமதி நகராக உள்ளது. தொழில் துறையினர், ரீபண்ட் பெறுவதில் தாமதம் உள்பட வரி சார்ந்து எத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டாலும், நேரடியாக என்னை அணுகி தெரிவிக்கலாம். வர்த்தகர்களுடன் கலந்து ஆலோசித்து, பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை