வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆளுக்கு.ஒரு கார் வாங்கிட்டீங்களா தாயி. விலை ரொம்ப குறைஞ்சிடிச்சு.
திருப்பூர்: ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் இன்று முதல் அமலாகிறது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., இனி 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இன்று முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய உள்ளது. ''இது குடும்பங்களுக்கு கொண்டாட்டமான விஷயம்'' என்று இல்லத்தரசியர் கூறுகின்றனர். சேமிப்பு உருவாகும்
சுப்புலட்சுமி, தென்னம்பாளையம்: ஜி.எஸ்.டி. குறைப்பு நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகையை மீதப்படுத்தும். தேவையான பொருட்களைக் கூட தேடிப்பார்த்து அதன் மீதான வரியைக் கணக்கிட்டு பார்க்கும் நிலை மாறும். ஒவ்வொரு முறையும் வீட்டுத் தேவைக்கு பொருட்கள் வாங்கி விட்டு பில்லைப் பார்த்தால், பெரும் குழப்பமாக இருக்கும். குறிப்பிட்ட தொகை வரியாக மட்டுமே செலுத்தும் நிலை மாறி விடும். உலர்பழ வகைள், நெய், வெண்ெணய், சப்பாத்தி, பரோட்டா, பிஸ்தா, பன்னீர் வகைகள், நொறுக்குத் தீனிகளும் விலை குறையும். விலை குறையும்
சுபாஷினி, அண்ணா நகர்: குடும்பத்துக்கான செலவுகளில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான பட்ஜெட் அதிகம். தற்போது,ஜி.எஸ்.டி. 2.0 மூலம் பெருமளவு வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. 'ஏசி', 'டிவி', போன்றவற்றின் வரியும், பாத்திர வகைகள் மீதான வரிகளும் குறைவதால் விலை பெருமளவு குறையும். மளிகை பொருட்கள், சோப், ஷாம்பு வகைகளும், துணிகள் மீதான வரிகளும் குறைக்கப்படும். இது குடும்பங்கள் கொண்டாடும் வகையில் உள்ளது. சிகரெட், புகையிலை பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது, அவற்றின் பயன்பாட்டை குறைத்து நன்மை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையான பலன்
ரேணுகா தேவி, அவிநாசி: உணவுப் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. பதப்படுத்தப்பட்ட பால், உயர்ரக பிஸ்கட்டுகள், வெண்ணெய், வாட்டர் பாட்டில், உலர் பழங்கள், ஐஸ்கிரீம், ஜாம், பன்னீர் போன்றவைக்கு வரி குறைப்பு செய்துள்ளனர். நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு வகைகள், அரிசி, கோதுமை, எண்ணெய் ஆகியவற்றுக்கும் வரி குறைப்பு செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் வரி குறைப்பின் உண்மையான பலனை அனுபவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்ஜெட் குறையும்
சுதாமணி, காந்தி நகர்: நடுத்தர மக்களின் குடும்ப செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜி.எஸ்.டி., வந்த பிறகுதான், முறைகேடாக லாபம் ஈட்டுவது குறைந்து, நேர்மையான கணக்குப்பதிவு நடந்தது. மளிகைப்பொருட்கள் உட்பட, வீடுகளில் பயன்படுத்தும் பொருட்கள் விலை குறையும் என்று, பலரும் கூறுகின்றனர். அதன்படி, விலை குறையும் போது, வீடுகளில், மாதாந்திர பட்ஜெட் செலவு சற்று குறையும். அது, பெண்களின் சேமிப்பாக மாறும். செலவு குறைவது மகிழ்ச்சிதான். கண்காணிக்க வேண்டும்
சித்ரா தேவி, பாரதி நகர்: பொதுமக்களின் சுமை குறைய வேண் டும் என்பதற் காகத்தான், அரசு வரியை குறைத்துள்ளது. மொத்த வியாபாரிகள், வர்த்தகர்கள், அந்தந்த வரி குறைப்புக்கு ஏற்ப, விலை குறைப்பு செய்ய வேண்டும்; அப்போதுதான், பொருட்கள் விலையும் குறையும்; அரசின் நோக்கமும் நிறைவேறும். ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. வரி குறைப்பிற்கு பிறகு, விலை குறைக்கப்படுவதை, அதிகாரிகள் கண்காணி த்து, அமல்படுத்த வேண்டும்.
ஆளுக்கு.ஒரு கார் வாங்கிட்டீங்களா தாயி. விலை ரொம்ப குறைஞ்சிடிச்சு.