தொழில் முனைவோருக்காக வழிகாட்டு மையம் துவக்கம்
திருப்பூர் : திருப்பூரில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய வழிகாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் இயங்கும் யெஸ் இந்தியா கேன் மற்றும் மேஹலா மெஷின்ஸ் இந்தியா நிறுவனம் ஆகியன இணைந்து புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய வழிகாட்டு மையத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மையம் வாயிலாக, இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் தயாரிக்கப்படும் ரெடிமேட் துணிகள், ஆடைகளை ஒரே இடத்தில் உலக சந்தைக்கு விற்க முடியும். இந்த முன்னோடியான முயற்சி, திருப்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது. தலைமை குழுவில், யெஸ் இந்தியா கேன் தலைவர் வால்ரஸ் டேவிட், மேஹலா மெஷின்ஸ் இந்தியா நிறுவன தலைவர் சுப்ரமணியம், இயக்குநர் பாரத் மற்றும் துணி பிரிவு தலைவர் ராபர்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.