உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளையாட்டு ஆடை நுட்பம்; 16ல் வழிகாட்டி கருத்தரங்கு

விளையாட்டு ஆடை நுட்பம்; 16ல் வழிகாட்டி கருத்தரங்கு

திருப்பூர்; 'நிட் பேர்' கண்காட்சியை முன்னிட்டு, வரும் 16ம் தேதி தொழில் வழிகாட்டி கருத்தரங்கு நடக்க உள்ளது. வசந்தகாலம் மற்றும் கோடைக்கால ஆர்டர் களுக்கு வழிகாட்டும், பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையிலான, இந்திய சர்வதேச 'நிட்பேர்' கண்காட்சி, திருமுருகன்பூண்டி, ஐ.கே.எப்., வளாகத்தில், 17ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. இந்தியா நிட்பேர் அசோசியேஷன் சார்பில் நடக்கும், 52வது கண்காட்சியை, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்( ஏ.இ.பி.சி.,) - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்ளிட்டவை இணைந்து வழங்குகின்றனர். திருப்பூர் பின்னலாடை உற்பத்தி சாதனைகளை காட்சிப்படுத்தும் இக்கண்காட்சியில், ஜப்பான், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் பார்வையிட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஐரோப்பா, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் பார்வையிட வருகின்றனர். கண்காட்சி வாயிலாக, புதிய வர்த்தக வாய்ப்புகளைத் திருப்பூர் பெறும். வர்த்தக வளர்ச்சிக்கான கண்காட்சியுடன், வழிகாட்டி கருத்தரங்கும் நடத்தப்படுகிறது. வரும், 16ம் தேதி மாலை, பாப்பீஸ் ஓட்டல் அரங்கில், மூன்று தலைப்புகளில் தொழில் வழிகாட்டி கருத்தரங்கு நடக்க உள்ளது. 'செயற்கை நுாலிழை உற்பத்தி (விளையாட்டு ஆடை) தொழில்நுட்பம்' என்ற தலைப்பில், தொழில் வல்லுனர்கள் கிஷான் தாகா, சஞ்சய் சுக்லா பேசுகின்றனர். வியாபாரத்தை எவ்வாறு மறுகட்டமைப்பு செய்வது என்ற தலைப்பில், வர்த்தக ஆலோசகர் ராஜேஷ் பேடா பேசுகிறார். 'எதிர்கால வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப புத்தாக்கம்' என்ற தலைப்பில், தொழில்நுட்ப வல்லுனர்கள் பேச உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை