உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துணி வாங்கி ரூ.6.36 கோடி மோசடி; குஜராத் வாலிபர் மும்பையில் கைது

துணி வாங்கி ரூ.6.36 கோடி மோசடி; குஜராத் வாலிபர் மும்பையில் கைது

திருப்பூர்; காடா துணிகள் கொள்முதல் செய்து, 6.36 கோடி ரூபாயை மோசடி செய்த குஜராத் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், ஷெரீப் காலனியை சேர்ந்தவர் சித்தார்த் குமார் சலேச்சா, 40. காடா துணி ஏற்றுமதியாளர். இவரிடம், குஜராத் மாநிலம், ஆமதாபாத்தை சேர்ந்த ரிஷப் பண்டாரி, 29, திவியங்க் பண்டாரி, 34 ஆகியோர் 6.36 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகளை கொள்முதல் செய்தனர். இதற்கான பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தினர். சித்தார்த் குமார் சலேச்சா திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் அனில்குமார், இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான தனிப்படையினர் மும்பையில் பதுங்கியிருந்த ரிஷப் பண்டாரியை கைது செய்தனர்; திருப்பூர் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திவியங்க் பண்டாரியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை