உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடைக்கு தீவைத்த ஆசாமி மீது குண்டாஸ்

கடைக்கு தீவைத்த ஆசாமி மீது குண்டாஸ்

திருப்பூர்; திருப்பூர், வேலம் பாளையத்தில் ராஜபெருமாள், 40 என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.இவர் கடை வைப் பதற்கு முன்பாக, சுகுமார், 40 என்பவரிடம் வேலை செய்து வந்தார். ராஜபெருமாள் தனியாக கடை வைத்த பின், தொழில் போட்டி ஏற்பட்டது. இதனால், கோபமடைந்த சுகுமார், தனது நண்பருடன் சேர்ந்து, 2023ம் ஆண்டு ராஜபெருமாளின் கடைக்குள், வெடி மருந்தை வீசி தீப்பிடிக்க வைத்தார். தீ விபத்து காரணமாக, பல லட்சம் மதிப்புள்ள பொருள் எரிந்து சேதமானது. அனுப்பர்பாளையம் போலீசார் சுகுமாரை கைது செய்தனர். தொடர் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், சுகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அவரை குண்டர்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை