மேலும் செய்திகள்
அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு திருமணம்
22-Oct-2024
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், அறநிலையத்துறையின் இலவச திருமண திட்டத்தின் கீழ், 13 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடந்தது.அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார், அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், துணை ஆணையர் ஹர்ஷினி ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. மணமக்களுக்கு 4 கிராம் தங்கத்தில் திருமாங்கல்யம், மணமகளுக்கு முகூர்த்த புடவை உள்ளிட்ட 90,000 ரூபாய் மதிப்புள்ள திருமணத்திற்கான சீர் வரிசைகள் வழங்கப்பட்டன. மகிழ்ச்சி ஊற்று அங்கே மலர்ந்தது.திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளார்கள் என உதவி ஆணையர் தனசேகர் தெரிவித்தார்.கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர்கள் சீனிவாசன், ரத்தினாம்பாள், மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், உதவி ஆணையர் தனசேகர், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
22-Oct-2024