உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயர்த்தப்பட்ட கூலி வழங்கப்பட்டதா; விசைத்தறியாளர்களுக்கு அறிவுரை

உயர்த்தப்பட்ட கூலி வழங்கப்பட்டதா; விசைத்தறியாளர்களுக்கு அறிவுரை

திருப்பூர்: மின் கட்டண உயர்வு, தொழிலாளர் சம்பளம் உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு உள்ளிட்ட விலைவாசி உயர்வு அடிப் படையில் விசைத்தறி நெசவு கூலியை உயர்த்தி வழங்கவும், அதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தவும் விசைத்தறியாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இதனை வலியுறுத்தி, ஜவுளி உற்பத்தி நிறுத்தம், உண்ணாவிரதம் என கடந்த இரு மாதம் முன், போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து சோமனுார் பகுதி ரகங்களுக்கு 15 சதவீதம், பிற பகுதி ரகங்களுக்கு, 10 சதவீதம் நெசவு கூலி அதிகரித்து வழங்குவதாக முடிவு ஏற்பட்டது. இதனால், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள், அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.இந்நிலையில், கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அதன்படி உயர்த்தப்பட்ட கூலி நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்ய இக்கூட்டத்தில் விசைத்தறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.வரும், 16ம் தேதி முதல், இதற்கான ஆதாரங்களை பெறும் வகையில் உற்பத்தி பில், கூலி பில் ஆகியவற்றை ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பெற்று சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும், விசைத்தறி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ