ெஹல்த் அண்ட் பிட்னெஸ் 2 நாள் கண்காட்சி நிறைவு
திருப்பூர்; திருப்பூர், காங்கயம் சாலையில் உள்ள காயத்ரி மஹாலில், ஜே.கே., ஆட்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் நிறுவனம் சார்பில், ஹெல்த் அண்ட் பிட்னஸ் 2 நாள் கண்காட்சி நடந்தது. டாக்டர் முருகநாதன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாலா ஆர்த்தோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியன், பல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஆனந்தி, ஆதித்யா கிரியேஷன் உரிமையாளர் பொன்னுசாமி, ஏ.எம்.டி., ஓவர்சீஸ் இம்பெக்ஸ் (இந்தியா) நிர்வாக இயக்குனர் மன்சூர் அலி அஹமட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஜே.கே., ஆட்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், சுமித்ரா ரமேஷ் ஆகியோர் கூறுகையில், ''மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூரில் முதல் முறையாக ஹெல்த் அண்ட் பிட்னெஸ் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இதில், மருத்துவத் துறை சார்ந்த நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரத்தப் பரிசோதனை நிலையம், மருந்தகங்கள், சித்த மருத்துவம், ஹோமியோ மருத்துவம், அக்குபஞ்சர் உட்பட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகள் அமைத்திருந்தன. கண்காட்சிக்கு வருவோருக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது'' என்றனர். கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.