ஆரோக்கியமே மிக சிறப்பு
மருந்தே உணவு என்று சொல்லும்போது, எத்தனை வசதி இருந்தாலும், எதற்கெடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் எப்படி? வாயையும் வயிற்றையும் கட்டுப்படுத்த பழகிக்கொண்டால், உடலும் மனமும் நாம் சொல்வதைக் கேட்கும்.அதில்லாமல், சுகாதாரமற்ற சாலையோர உணவுகள் துவங்கி, பார்க்கும் எல்லாவற்றையும், சாப்பிட முயன்றால், உடல் பெருகுவதுடன், ஜீரணக் கோளாறும் ஏற்படும்.எனவே, பசிக்கும்போது மட்டும் உணவை உட்கொள்ளும் முறையை கடைபிடித்தால், தேவையின்றி வரும் உடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். அதுவே ஆரோக்கியமான உடல் நலத்துக்கு நம்மை இட்டுச் செல்லும்.